Posts

Showing posts from November 25, 2012

ஆசிரியர் தகுதி தேர்வு பிரச்னை தொடர்கதை இலவச கட்டாய கல்வி உரிமை சட்டம் அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது.ஆனால் இத்தேர்வில் எதிர்பார்த்த தேர்ச்சி சதவீதம் இல்லாத சூழ்நிலையில் தொடர்ந்து புதிய நியமனங்களில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது.மேலும்,இடைநிலை ஆசிரியர்கள் மாநில அளவிலான சீனியாரிட்டியும் பரிசீலனைசெய்யப்படும்.பட்டதாரி ஆசிரியர்களுக்கு எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ் 2,பட்டம் மற்றும் பி.எட் பட்டங்களின் மார்க்கும் பரிசீலனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் தொடர்ந்து இழுபறி நிலையை ஏற்பட்டுள்ளது. எனினும், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் தங்களுக்கு விரைவில் பணி நியமன ஆணை வழங்கப்படும் என நம்பிக்கையில் காத்திருக்கின்றனர்.இதற்கிடையில் ஆசிரியர் தகுதி தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று அனைத்து ஆசிரிய சங்கங்களும் பல்வேறு போராட்டங்களை நடத்தி போர்க்கொடி தூக்கியுள்ளதால் இப்பிரச்னையில் தொடர்ந்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது.ஆசிரியர் தகுதி தேர்வுக்குஎதிராக கோர்ட்களில் பல வழக்குகளும் நிலுவையில் இருந்து வருவதால் புதிய ஆசிரியர் நியமனம் எப்போது என்ற எதிர்பார்ப்பு தொடர்ந்து ஏற்பட்டுள்ளது.இதற்கிடையில் தமிழகத்தில் 23.8.2010ம் தேதி இலவச கட்டாய கல்வி உரிமை சட்டம் அமல்படுத்தப்பட்ட நிலையில் இத்தேதிக்கு பிறகு புதிய ஆசிரியர்களாக நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு தகுதி தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தற்போது கல்வித் துறை அதிகாரிகளின் ஆலோசனை கூட்டத்தில் சம்பந்தப்பட்ட ஆசிரிய,ஆசிரியைகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது.புதிய பணி நியமன காலத்தில் இருந்து 5 ஆண்டுகளுக்குள் இத்தேர்வை எழுதி தேர்ச்சிபெற வேண்டும் என்று இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலியான பணி இடங்களில் புதிய ஆசிரியர் நியமனம் செய்யப்பட்ட நிலையில் இவர்கள் தகுதி தேர்வை எழுதாத சூழ்நிலையில் இப்பணியிடங்களுக்கு கல்வித் துறை ஒப்புதல் அளிக்கவில்லை. இதனால் இந்த ஆசிரிய,ஆசிரியைகள் தகுதி தேர்வை கட்டாயம் எழுதி தேர்ச்சி பெற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.மேலும்,அரசு உதவி பெறும் பள்ளிகளில் மகப்பேறு விடுப்பு காலி பணியிடத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி பெற்றவர்களை மட்டுமே நியமனம் செய்ய வேண்டும் என்ற சூழ்நிலையில் இப்பணியிடங்கள் தொடர்ந்து காலியாகவே உள்ளது. இதனால் பல பள்ளிகளில் ஆசிரியர்கள் தட்டுப்பாடு உள்ளதால் மாணவ, மாணவிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர.எனவே, இதுபோன்ற குளறுபடிகளை நீக்க காலி பணியிடங்களில் உடனடியாக ஆசிரிய, ஆசிரியைகளை நியமனம் செய்யும் வகையில் தகுதி தேர்வை ரத்து செய்து ஏற்கனவே உள்ள வேலைவாய்ப்பு அலுவலக சீனியாரிட்டியின்படி இவர்களை நியமனம் செய்ய வேண்டும் என்று அனைத்து ஆசிரிய சங்கங்களும் அரசை வலியுறுத்தி வருகின்றன.தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்களுக்கும் இச்சங்கங்கள் திட்டமிட்டுள்ள நிலையில் இப்பிரச்னையை முடிவுக்கு கொண்டுவர வேண்டியது அரசின் கடமையாகும்

பட்டதாரி ஆசிரியர்கள் நியமன தடை வழக்கில் அரசுக்கு நோட்டீஸ் பட்டதாரி ஆசிரியர்களை பணி நியமனம் செய்ய, தடைகோரிய வழக்கில், "இடைப்பட்ட காலத்தில் செய்யப்படும் பணி நியமனங்கள், இவ்வழக்கின் முடிவுக்கு கட்டுப்பட்டது,'எனவும், அரசுக்கு நோட்டீஸ்அனுப்பவும், மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. உசிலம்பட்டி அருகே, கவுண்டம்பட்டி சூரியகாந்தியம்மாள் தாக்கல் செய்த மனு: நான், உசிலம்பட்டி அருகே திசுப்பட்டி அரசுகள்ளர் மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியை. மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்ட கள்ளர் சீரமைப்புத்துறை பள்ளிகளின் ஆசிரியர்கள்,வேறு பள்ளிகளுக்கு இடமாறுதல் கோரி, பள்ளிக் கல்வித்துறை செயலாளரிடம் மனு அளித்தோம். அதன்படி, கள்ளர் சீரமைப்புத்துறை பள்ளிகளின் 119 பட்டதாரி ஆசிரியர்கள், 27 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை, பள்ளிக் கல்வித்துறைக்கு மாறுதல் செய்ய, 2011 மார்ச்சில் அரசு உத்தரவிட்டது. ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம், பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க, அக்.,14ல், தகுதித்தேர்வு நடந்தது. நவ., 2 ல் தேர்வு முடிவு வெளியானது. நவ.,6 முதல் 7 வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது. இவர்கள், பல்வேறு மாவட்டங்களில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். இதனால், எங்களது இடமாறுதல் பாதிக்கப்படும். ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களை பணி நியமனம் செய்ய, தடை விதிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் முன், மனு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வக்கீல் சதீஷ் ஆஜரானார். நீதிபதி,""இடைப்பட்ட காலத்தில் செய்யப்படும் பணி நியமனங்கள், இவ்வழக்கின் முடிவுக்கு கட்டுப்பட்டது,&'&' என்றார். பள்ளிக் கல்வித்துறை செயலாளர், கள்ளர் சீரமைப்புத்துறை இணை இயக்குனருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை 3 வாரங்களுக்கு ஒத்திவைத்தார்

உடற்கல்வி ஆசிரியர் 1,000 பேர் நியமனம் சென்னை : கல்வித்துறையில், நான்காவது நாளாக நேற்று நடந்த பணி நியமன கலந்தாய்வில், உடற்கல்வி ஆசிரியர், 1,025 பேர் உட்பட, 1,453 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். கடந்த, 21ம் தேதி, அமைச்சுப் பணியில் இருந்து, தகுதி வாய்ந்தவர்களுக்கு, முதுகலை ஆசிரியர் பணி வழங்குவதற்கான கலந்தாய்வு நடந்தது. 22ம் தேதி, ஓவிய ஆசிரியர் நியமன கலந்தாய்வும்; 23ம் தேதி, காவலர் மற்றும் துப்புரவு பணியாளர் நியமன கலந்தாய்வும் நடந்தது. நான்காவது நாளான நேற்று, 1,025 உடற்கல்வி ஆசிரியர், கலை ஆசிரியர், 304 பேர், தையல் ஆசிரியர், 84 பேர் மற்றும் இசை ஆசிரியர், 40 பேர் உட்பட, 1,453 பேருக்கான நியமனம் நடந்தது. அந்தந்த மாவட்ட தலைமை இடங்களில், இணையதளம்வழியாக, கலந்தாய்வு நடந்தது. சென்னை மாவட்டத்தில், உடற்கல்வி ஆசிரியர், 31 பேர், இசை ஆசிரியர், இரண்டு, ஓவிய ஆசிரியர், நான்கு, தையல் ஆசிரியர், மூன்று பேர் என, 40ஆசிரியர் பணியிடங்கள், ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதற்கான கலந்தாய்வு, சேத்துப்பட்டு, எம்.சி.சி., பள்ளியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் நடந்தது. "மாநிலம் முழுவதும், அனைத்து பணி நியமனங்களும் நடந்து முடிந்தன; 1,453 பேருக்கும், சம்பந்தபட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், பணி நியமன உத்தரவுகளை வழங்கினர்' என, பள்ளி கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

பள்ளி கல்வித்துறையின் விஷன் 2024: அரசு பள்ளிகளில்100% தேர்ச்சி-25-11-2012 சென்னை: பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில் , 2024 ம் ஆண்டில் , 100 சதவீத தேர்ச்சி இலக்கை எட்டுவதற்கு , பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது . அரசு , தனியார் , உதவிபெறும் பள்ளிகள் என , ஒட்டுமொத்தமாக , 55 ஆயிரம் பள்ளிகள் இயங்கி வருகின்றன . இவற்றில் , 1.35 கோடி மாணவ , மாணவியர் படிக்கின்றனர் . 5.5 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர் . பல ஆண்டுகளாக இருந்து வந்த கல்விமுறை , முந்தைய தி . மு . க ., ஆட்சியில் மாற்றப்பட்டு , சமச்சீர் கல்வி திட்டம் கொண்டு வரப்பட்டது . அ . தி . மு . க ., அரசு , இத்திட்டத்தை மேலும் வலுப்படுத்தி , 1 முதல் 8 ம் வகுப்பு வரை , முப்பருவ கல்வி முறை திட்டத்தையும் , தொடர் மதிப்பீட்டு முறை திட்டத்தையும் அமல்படுத்தியுள்ளது . கல்வி தரத்தை உயர்த்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் , பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன . எனினும் , பொதுத்தேர்வு தேர்ச்சி சதவீதம் , தொடர்ந்து ஒரே அளவில் இருந்து வருகிறது . பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு தேர்ச்சி சதவீதம் , 85 முதல் , 87 வரை இருந்து வருகிறது . இதிலும் , தனியார் பள்ளி மாணவ , மாணவியரின் தேர்ச்சி கணிசமாகவும் , அரசுப் பள்ளி மாணவ , மாணவியரின் தேர்ச்சி குறைவாகவும் உள்ளது . மேலும் , தென் மாவட்டங்கள் , கல்வி தரத்தில் உயர்ந்தும் , வடமாவட்டங்கள் தாழ்வான நிலையிலும் உள்ளன . இந்த முரண்பாடுகள் ஏன் ஏற்படுகிறது என்பது குறித்து , கடந்த பொதுத்தேர்வு தேர்ச்சியின் அடிப்படையில் , பள்ளிக் கல்வித்துறை , விவரமாக ஆய்வு நடத்தி உள்ளது . ஒட்டுமொத்த தேர்ச்சியில் , அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் குறைவதற்கான காரணங்களை ஆய்வு செய்ததில் , தேர்ச்சி குறைந்த அனைத்துப் பள்ளிகளிலும் , ஆசிரியர் பற்றாக்குறை அல்லது ஏற்கனவே உள்ள பணியிடங்களை நிரப்பாமல் இருப்பது தெரிய வந்துள்ளது . பிளஸ் 2 தேர்ச்சி குறித்த ஆய்வு விவரம் , தற்போது தெரியவந்துள்ளது . அதன்படி , கணிதப் பாடத்தில் , 10.8 சதவீதம் பேரும் , வணிகவியல் பாடத்தில் , 8.9 சதவீதம் பேரும் தோல்வி அடைந்துள்ளனர் . பாட வாரியாக , அரசுப் பள்ளி மாணவர்கள் அடைந்துள்ள தோல்வி குறித்து , கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது . தமிழ் , ஆங்கிலப் பாடத்தில் தான் , மிகக் குறைவான மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளனர் . தமிழில் , 0.8 சதவீதம் பேரும் , ஆங்கிலத்தில் , 2.20 சதவீதம் பேரும் மட்டுமே தோல்வி அடைந்துள்ளனர் . கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்திலும் , மிகக் குறைவாக , 0.8 சதவீத மாணவர் மட்டுமே தோல்வி அடைந்துள்ளனர் . 2,243 அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பெற்ற சராசரி மதிப்பெண்கள் , 682. அரசுப் பள்ளி மாணவர்களில் , 77 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளனர் . அதுவே , தனியார் பள்ளி மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் , 93.6 ஆக உள்ளது . இது குறித்து , பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் கூறியதாவது : அரசுப் பள்ளி மாணவர்கள் அனைவரும் , முதல் வகுப்பில் தேர்ச்சி பெற வேண்டும் என்பது , இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது . அரசு எடுத்துவரும் தொடர் சீர்திருத்த நடவடிக்கைகளால் , அரசுப் பள்ளிகளின் தரம் உயர்ந்து வருகிறது . கடந்த பிளஸ் 2 தேர்வில் , 325 அரசுப் பள்ளிகள் , தனியார் பள்ளிகளை மிஞ்சி , 93.6 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளன . தேர்ச்சி சதவீத முரண்பாடுகளை களைந்து , 2024 ம் ஆண்டு பொதுத்தேர்வில் , 100 சதவீத தேர்ச்சி மற்றும் கல்வி தரத்தில் , சரிசமமான நிலையை ஏற்படுத்த வேண்டும் என , இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது . அதற்கேற்ப , சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன . அதன்படி ஏற்கனவே அனுமதிக்கப்பட்டு , காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் கூடுதலாக தேவைப்படும் ஆசிரியர் பணியிடங்கள் , வரும் கல்வியாண்டு துவங்குவதற்கு முன் நிரப்பிட நடவடிக்கை எடுக்கப்படும் . மாணவர்கள் பாதிப்பை தவிர்க்க , தற்காலிகமாக , பெற்றோர் - ஆசிரியர் கழகம் சார்பில் , ஆசிரியரை நியமித்துக்கொள்ள , பள்ளி நிர்வாகங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது . திறமையான ஆசிரியர் பயிற்றுனர்களை , ஆசிரியர் பணிக்கு மாறுதல் செய்யவும் திட்டமிட்டுள்ளோம் . 60 சதவீதத்திற்கும் குறைவாக தேர்ச்சி குறைந்த அரசுப் பள்ளிகளில் , பொதுத்தேர்வு எழுதும் மாணவ , மாணவியருக்கு , தொடர்ந்து சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவது உடன் , பாட நிபுணர்களின் , வழிகாட்டுதல்களும் அளிக்கப்படும் . இந்த ஒருங்கிணைந்த நடவடிக்கைகளால் , இலக்கை எட்ட முடியும் என , நம்புகிறோம் . இவ்வாறு , கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன