Posts

Showing posts from November 22, 2012

ஆசிரியர் தகுதி தேர்வை ரத்து செய்ய நெல்லையில் பேரணி-22-11-2012எழுத்தின் அளவு :Print Emailதிருநெல்வேலி: ஆசிரியர் தகுதி தேர்வை ரத்து செய்ய கோரி தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் பாளையில் இன்று (22ம் தேதி) பேரணி நடக்கிறது.6வது ஊதிய குழுவில் அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து சலுகைகளையும் ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும். ஆசிரியர் தகுதி தேர்வு உடனடியாக ரத்து செய்யப்பட்டு வேலைவாய்ப்பு அலுவலக சீனியாரிட்டியின்படி ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும். தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களின் ஒட்டுமொத்தபணிக் காலத்தை கணக்கிட்டு தேர்வு நிலை,சிறப்பு நிலை வழங்க வேண்டும்.இடைநிலை, பட்டதாரி, கைத்தொழில் ஆசிரியர்களின் தொகுப்பூதிய காலத்தை நியமன நாள் முதல் பணி வரன்முறை செய்ய வேண்டும். பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். அனைத்து நடுநிலைப் பள்ளிகளிலும் தமிழ், வரலாறு பட்டதாரி ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும்.இந்த கோரிக்கைகள் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் இன்று (22ம் தேதி) பேரணி நடக்கிறது. நெல்லை மாவட்டத்தில் பாளை லூர்துநாதன்சிலை முன்பு இன்று (22ம் தேதி) மாலை 5 மணிக்கு பேரணி ஆரம்பமாகி பாளை மார்கெட் திடலில் முடிவடைகிறது. மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமைவகிக்கிறார். மாவட்ட செயலாளர் தர்மராஜ் பிராங்களின் வரவேற்கிறார்.அகில இந்திய ஆசிரியர் கூட்டணி பொதுக்குழு உறுப்பினர் ரமாதேவி பார்வையாளராக பங்கேற்கிறார். இதில் தமிழ்நாடு தனியார் பள்ளி நிர்வாகிகள் சங்க மாநில தலைவர் பாண்டியன், மாநில துணை செயலாளர் தாயப்பன், தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழு உறுப்பினர் ஆரோக்கியராஜ், மாவட்ட நிர்வாகிகள் ஜான் துரைசாமி, முத்துராமன், மனோகரன், பிரபு கட்டாரி, சந்திரன், முத்தம்மாள், மெர்சி நிர்மலா சாமுவேல், மோதிலால் ராஜ், மருது, ராமர், கிறிஸ்டோபர், இனிகோ,பாபு உட்பட பலர் பேசுகின்றனர்.மாவட்ட பொருளாளர் சிவஞானம் நன்றி கூறுகிறார்.

ஆசிரியர் தகுதி தேர்வில் மற்ற மாநிலங்களின் கட் ஆப் மதிப்பெண்கள் * ANDHRA: OC-60%, OBC-50%, SC/ST/PH-40% * MANIPPUR: OC-60%, OTHER-50%, *ORISSA : OC-60%, OTHER-50% * ARUNACHALA PRADHESH : OC-60%, OTHER-55%, *ASSAM: OC-60%, OTHER-55%, * BHIKAR: OC-60%, OTHER-55%, * CHATTISGARH : OC-60%, OTHER-55%, *RAJASTHAN: OC-60%, OBC-40%, ST-36%, * UTTARA PRADHESH: OC-60%, OTHER-55%, *WEST BENGAL : OC-60%, OTHER-55%

ஆசிரியர்கள் நியமனத்துக்கு பட்டியல் தயாரிக்கும் பணி தீவிரம் டி.இ.டி., தேர்வில் தேர்வு பெற்றவர்களில், பணி நியமனத்திற்கு தகுதி வாய்ந்தவர்கள் பட்டியல், தயாரிக்கும் பணி, தீவிரமாக நடந்து வருகிறது. இறுதி தேர்வுப் பட்டியலில், இடம்பெறும், 22 ஆயிரம் பேருக்கு, விரைவில் வேலை வழங்கப்பட உள்ளது.டி.இ.டி.,தேர்வுஅடிப் படையில், இடைநிலை, பட்டதாரி ஆசிரியர், 25 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்படுவர் என, டி.ஆர்.பி., அறிவித்தது. இந்த ஆண்டு, ஜூலையில் நடந்த முதல் டி.இ.டி., தேர்வில், 2,448 பேரும், அக்டோபரில் நடந்த மறு தேர்வில், 19 ஆயிரம் பேரும், தேர்வு பெற்றனர். ஆசிரியர் நியமன புதிய வழிகாட்டிவிதிமுறைகளின்படி, இவர்கள் அனைவருக்கும், சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. தற்போது, இறுதி தேர்வுப் பட்டியல் தயாரிக்கும் பணி, தீவிரமாக நடந்து வருகிறது. இந்தப் பணிகள் இரு நாட்களில் முடிவடையலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.உரிய சான்றிதழ் இல்லாதவர்கள், பாடத்திற்குரிய கல்வித்தகுதி இல்லாதவர்கள் குறித்து, டி.ஆர்.பி., அதிகாரிகள், கணக்கெடுப்பு நடத்தி வருகின்றனர். டிசம்பர் இறுதிக்குள்... முதல் தகுதி தேர்வுக்கு, தனி இறுதி தேர்வுப் பட்டியலும், மறு தேர்வுக்கு, தனி இறுதி தேர்வுப் பட்டியலும், இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்தப் பட்டியல் வெளியானதும், 22 ஆயிரம் பேரும், துறை வாரியாக பிரித்து, சம்பந்தபட்ட துறைகளுக்கு, தேர்வுப் பெற்றவர்களின் பட்டியலை,டி.ஆர்.பி., அனுப்பும்.முதலில், பள்ளிக் கல்வித்துறை, தொடக்க கல்வித்துறை, அதன்பின் மாநகராட்சி பள்ளிகள், ஆதிதிராவிட நலத்துறை பள்ளிகள், சமூக நலத்துறை பள்ளிகள் என, படிப்படியாக ஆசிரியர் பிரித்து, பணி நியமனம் செய்யப்படுவர். அடுத்த மாத இறுதிக்குள், புதிய ஆசிரியர்களை நியமனம் செய்ய, பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. 400 பேர் தகுதியிழப்பு? டி.இ.டி., மறுதேர்வில் தேர்வு பெற்ற, 19 ஆயிரம் பேரில், 2 சதவீதம் பேர் வரை, தகுதி இழக்க நேரிடும் என, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. அதன்படி, 380 பேர் வரை, தேர்வுப் பட்டியலில் இருந்து, நீக்கப்படுவர் என, தெரிகிறது. Advertisement இது குறித்து, டி.ஆர்.பி., வட்டாரம் கூறியதாவது:சிலர், சரியான கல்வித்தகுதியை பெற்றிருந்தாலும், உரிய சான்றிதழ்கள் இல்லாமல் உள்ளனர். சிலர், "கிராஸ் மேஜர்'பாடங்களை படித்துள்ளனர். இன்னும் சிலருக்கு, கல்வி தகுதிக்குரிய சான்றிதழ்கள் இருந்தாலும், சாதி சான்றிதழ் உள்ளிட்ட இதர சான்றிதழ்கள் இல்லாமல் உள்ளனர்.அங்கீகாரம் இல்லாத கல்வி நிறுவனங்களில் படித்து, பட்டம் பெற்றவர்களும் உள்ளனர். இப்படி, பல்வேறு காரணங்களால், இரண்டு சதவீதம் பேர் வரை, பாதிக்கப்படலாம். இவர்கள் குறித்த சரியான புள்ளி விவரம், ஓரிரு நாளில் தெரியும்.இவ்வாறு, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. தகுதியில்லாதவர்களின் பட்டியலை, டி.ஆர்.பி., இணையதளத்தில் வெளியிடவும், அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். -நமது நிருபர்-