Posts

Showing posts from November 14, 2012
1,591 முதுகலை பட்டதாரி ஆசிரியர்  பணியிடங்களை தோற்றுவிக்க உத்தரவு சென்னை: அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 1,591 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களைதோற்றுவிக்க, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். தமிழக அரசின் செய்திக்குறிப்பு: அரசு மேல்நிலை பள்ளிகளில், 11 மற்றும், 12ம் வகுப்புகளில்  உள்ள, மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப,  1,591 முதுகலை பட்டதாரி  ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்படும்.  இதற்காக, அரசுக்கு ஆண்டுக்கு,  64 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும்.தற்போதுள்ள, 4,393 பள்ளிகள் மற்றும் புதிதாக துவக்கப்பட்ட,  544 பள்ளிகள் என, மொத்தம்,  4,937 பள்ளிகளுக்கு, தலா ஒரு ஆய்வக உதவியாளர் வீதம், 4,937 ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் உருவாக்கப்படும். இதில், 544 ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கு, முதல்வர்  ஏற்கனவே உத்தரவிட்டுள்ளார். மீதமுள்ள, 4,393 ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்பவும்,  1,764 பள்ளிகளுக்கு, பள்ளி ஒன்றுக்கு, ஒரு இளநிலை உதவியாளர் வீதம், பணியிடங்களை உருவாக்க உத்தரவிடப்பட்டிருக்கிறது. இதற்காக, அரசுக்கு, 109 கோடி ரூபாய் செ...
ஆசிரியர் காலியிட பட்டியல் வெளியிடப்படுமா?-13-11-2012 டிஇடி, தேர்வு வழியாக, 25 ஆயிரம் ஆசிரியர் தேர்வு செய்யப்படுகின்றனர். ஜூலையில் நடந்த டிஇடி, தேர்வில், 2,448 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அக், 14ல் நடந்த, அடுத்த தேர்வில், 19 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில், முதலில், 2,448 பேர், பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். அடுத்ததாக, 19 ஆயிரம் பேர் நியமனம் செய்யப்படுவர். மேலும், 2,900 முதுகலை ஆசிரியரும், விரைவில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.சென்னை: இடைநிலை, பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர் காலியிட பட்டியலை, தொடக்க கல்வித்துறை மற்றும் பள்ளிக்கல்வி இயக்ககம் வெளியிட வேண்டும் என, டிஇடி, தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் எதிர்பார்க்கின்றனர். பாட வாரியாக உள்ள மொத்த பணியிடங்களின் எண்ணிக்கையை, டிஆர்பி, வெளியிடாமல் உள்ளது. மேலும், மாவட்ட வாரியாக உள்ள ஆசிரியர் காலி பணியிடங்களின் பட்டியலை, தொடக்க கல்வித்துறை மற்றும் பள்ளிக் கல்வித்துறை வெளியிடவில்லை. காலியிடங்கள் விவரங்களை, இணையதளத்தில், இரு துறைகளும் வெளியிட்டால், இப்போதே, தங்களுக்கு ஏற்ற இடங்களை தேர்வு செய்ய வசதியாக இருக்கும் என, ஆசிரியர் பண...