TRB - TET - ONLINE கலந்தாய்வு எந்த மாவட்டத்தில் கலந்துக்கொள்வது ? பட்டதாரி ஆசிரியர்கள் : பட்டதாரி ஆசிரியர்களை பொறுத்தவரை TET தேர்விற்கு நீங்கள் அளித்த வீட்டு முகவரியே (Communication Address) உங்களுடைய முகவரியும் மாவட்டமும் ஆகும். அதாவது உங்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்ற மாவட்டமே உங்கள் மாவட்டமாகும். அந்த மாவட்ட கலந்தாய்வில் தான் தாங்கள் கலந்து கொள்ளவேண்டும். உங்கள் வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மாவட்டத்தை பொருட்படுத்த தேவையில்லை. இடைநிலை ஆசிரியர்கள்: இடைநிலை ஆசிரியர்களை பொறுத்தவரை எந்த மாவட்டத்தில் நீங்கள் உங்கள் ஆசிரியர் பயிற்சி கல்வித்தகுதியினை எந்த மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வைத்துள்ளீர்களோ, அந்த மாவட்டம் தான் நீங்கள் கலந்தாய்வில் பங்கேற்கவேண்டிய மாவட்டமாகும். இதில் வீட்டு முகவரியை (Communication Address)பொருட்படுத்த தேவையில்லை .

Comments

Popular posts from this blog