தகுதி தேர்வில் இருந்து தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்க கோரிக்கை
அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு தகுதி தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டுமென தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 20 ஆயிரத்து 920 ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கிய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். எம்.பில் முடித்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு உயர் கல்விக்கான ஊக்க ஊதியம் வழங்க வேண்டும்.
பயனற்ற புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வை காரணம் காட்டி, ஊதியம் வழங்க மறுப்பதை கைவிட வேண்டும். மேலும் அவர்களுக்கு தகுதித் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். அல்லது தேர்ச்சி பெறுவதற்கு 5 ஆண்டுகள் அவகாசம் அளிக்க வேண் டும்.
அரையாண்டு தேர்வு களை கடந்த ஆண்டுகளை போல் நடத்த வேண்டும். கடந்தஆகஸ்ட் மாதம் நடந்த கவுன்சலிங்கில் பள்ளிகளில் அதிக எண்ணிக்கையில் ஆசிரியர்கள் இருப்பதாக கூறி, சில ஆசிரியர்கள் மாற்றப்பட்டனர். ஆனால் தற்போது அதே பணியிடங்களில் மீண்டும்ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இனிவரும் காலங்களில் இதுபோன்ற தவறுகள் நடக்காமல் இருக்க பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
மாவட்ட இணை செயலாளர் லூயி ஜான்பிரிட்டோ, மாநில பொதுக் குழு உறுப்பினர்கள் கலைத்தங்கம், கண்ணன், ரிஷிகேசவன், பிரபு ஆகியோர் உடன் இருந்தனர்.
முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளில் கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து பாதிக்கபட்ட ஆசிரியர்களுக்கு விடியல் கிடைக்குமா??? கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து பாதிக்கபட்ட ஆசிரியர்களின் கோரிக்கை கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து அதிமுக ஆட்சியால் பழி வாங்கப்பட்ட எங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் விடியல் தருவாரா??? NCTE norms, நிலுவையில் உள்ள காலி பணியிடம் அதிமுக அரசு மூடி மறைத்து விட்டது இதை முதல்வர் ஸ்டாலின் வெளிச்சத்திற்கு கொண்டு வந்து பாதிக்கப்பட்ட எங்களுக்கு வேலை கொடுப்பாரா??? தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயம் என்று NCTE அறிவித்தது. 15-11-2011 அன்று அதிமுக அரசு நடைமுறை படுத்தியது. அந்த NCTE அறிக்கையில் clause v விதிப்படி 23-08-2010 முன்பு சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து இருந்தால் அல்லது விளம்பரம் வெளியிடப்பட்டு இருந்தால் அல்லது பணி நியமன வேலைகள் தொடங்கி இருந்தால் டெட் தேர்வு தேவை இல்லை என்று அறிவித்து உள்ளது. இந்த அறிக்கை 11 ஆண்டுகள் கழித்து தான் 2022 ஆம் ஆண்டு திமுக அரச...
Comments
Post a Comment