ஒன்றரை ஆண்டுகளில் 28 ஆயிரம் பேர் தேர்வு : டி.ஆர்.பி., பெருமிதம்

"ஒன்றரை ஆண்டுகளில், 10 வகை தேர்வுகளை நடத்தி, 28 ஆயிரம் பேர், அரசுப் பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்' என, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., தெரிவித்துள்ளது. 

அதன் அறிக்கை: கடந்த ஆண்டு, மே முதல்,நடப்பு ஆண்டு டிசம்பர் வரை, 10 வகையான தேர்வுகள் நடத்தப்பட்டன. சட்டக் கல்லூரி விரிவுரையாளர்கள், உதவி பேராசிரியர்கள், உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள், இடைநிலை, முதுகலை ஆசிரியர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கு, 28,414 பேர், தேர்வு செய்யப்பட்டனர். 

இவ்வாறு, டி.ஆர்.பி.,தெரிவித்துள்ளது. தேர்வுகளும், தேர்வு செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கையும் வருமாறு: தேர்வு தேர்வு செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 
 1. இடைநிலை ஆசிரியர் 9,689 
2. சிறப்பு ஆசிரியர் 1,555 
3. பட்டதாரி ஆசிரியர், ஆசிரியர் பயிற்றுனர்கள் 13,074
 4. கம்ப்யூட்டர் ஆசிரியர் 192 
5. சத்துணவு பணியாளர்கள், பட்டதாரி ஆசிரியர்களாக நியமனம் 136
 6. முதுகலை ஆசிரியர் 3,438 
7. உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் 34 
8. பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர் 151 
9. பாலிடெக்னிக் கல்லூரி - உதவி பேராசிரியர் 131 
10. சட்ட கல்லூரி விரிவுரையாளர்கள் 14 
மொத்தம் 28,414

Comments

Popular posts from this blog