ஆசிரியர் தகுதி தேர்வு பிரச்னை தொடர்கதை இலவச கட்டாய கல்வி உரிமை சட்டம் அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது.ஆனால் இத்தேர்வில் எதிர்பார்த்த தேர்ச்சி சதவீதம் இல்லாத சூழ்நிலையில் தொடர்ந்து புதிய நியமனங்களில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது.மேலும்,இடைநிலை ஆசிரியர்கள் மாநில அளவிலான சீனியாரிட்டியும் பரிசீலனைசெய்யப்படும்.பட்டதாரி ஆசிரியர்களுக்கு எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ் 2,பட்டம் மற்றும் பி.எட் பட்டங்களின் மார்க்கும் பரிசீலனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் தொடர்ந்து இழுபறி நிலையை ஏற்பட்டுள்ளது. எனினும், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் தங்களுக்கு விரைவில் பணி நியமன ஆணை வழங்கப்படும் என நம்பிக்கையில் காத்திருக்கின்றனர்.இதற்கிடையில் ஆசிரியர் தகுதி தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று அனைத்து ஆசிரிய சங்கங்களும் பல்வேறு போராட்டங்களை நடத்தி போர்க்கொடி தூக்கியுள்ளதால் இப்பிரச்னையில் தொடர்ந்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது.ஆசிரியர் தகுதி தேர்வுக்குஎதிராக கோர்ட்களில் பல வழக்குகளும் நிலுவையில் இருந்து வருவதால் புதிய ஆசிரியர் நியமனம் எப்போது என்ற எதிர்பார்ப்பு தொடர்ந்து ஏற்பட்டுள்ளது.இதற்கிடையில் தமிழகத்தில் 23.8.2010ம் தேதி இலவச கட்டாய கல்வி உரிமை சட்டம் அமல்படுத்தப்பட்ட நிலையில் இத்தேதிக்கு பிறகு புதிய ஆசிரியர்களாக நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு தகுதி தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தற்போது கல்வித் துறை அதிகாரிகளின் ஆலோசனை கூட்டத்தில் சம்பந்தப்பட்ட ஆசிரிய,ஆசிரியைகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது.புதிய பணி நியமன காலத்தில் இருந்து 5 ஆண்டுகளுக்குள் இத்தேர்வை எழுதி தேர்ச்சிபெற வேண்டும் என்று இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலியான பணி இடங்களில் புதிய ஆசிரியர் நியமனம் செய்யப்பட்ட நிலையில் இவர்கள் தகுதி தேர்வை எழுதாத சூழ்நிலையில் இப்பணியிடங்களுக்கு கல்வித் துறை ஒப்புதல் அளிக்கவில்லை. இதனால் இந்த ஆசிரிய,ஆசிரியைகள் தகுதி தேர்வை கட்டாயம் எழுதி தேர்ச்சி பெற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.மேலும்,அரசு உதவி பெறும் பள்ளிகளில் மகப்பேறு விடுப்பு காலி பணியிடத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி பெற்றவர்களை மட்டுமே நியமனம் செய்ய வேண்டும் என்ற சூழ்நிலையில் இப்பணியிடங்கள் தொடர்ந்து காலியாகவே உள்ளது. இதனால் பல பள்ளிகளில் ஆசிரியர்கள் தட்டுப்பாடு உள்ளதால் மாணவ, மாணவிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர.எனவே, இதுபோன்ற குளறுபடிகளை நீக்க காலி பணியிடங்களில் உடனடியாக ஆசிரிய, ஆசிரியைகளை நியமனம் செய்யும் வகையில் தகுதி தேர்வை ரத்து செய்து ஏற்கனவே உள்ள வேலைவாய்ப்பு அலுவலக சீனியாரிட்டியின்படி இவர்களை நியமனம் செய்ய வேண்டும் என்று அனைத்து ஆசிரிய சங்கங்களும் அரசை வலியுறுத்தி வருகின்றன.தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்களுக்கும் இச்சங்கங்கள் திட்டமிட்டுள்ள நிலையில் இப்பிரச்னையை முடிவுக்கு கொண்டுவர வேண்டியது அரசின் கடமையாகும்

Comments

Popular posts from this blog