
புதுச்சேரியில் 288 ஒப்பந்த ஆசிரியர்கள் நீக்கம்; விடிய விடிய காத்திருப்பு - மழையிலும் தொடர் போராட்டம் புதுச்சேரியில் 288 ஒப்பந்த ஆசிரியர்கள் நீக்கப்பட்டதையடுத்து நேற்று இரவு சட்டப்பேரவை அருகே விடிய விடிய காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்டட நிலையில் இன்று காலை மழையிலும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். புதுச்சேரி அரசு பள்ளியில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப கடந்த 2019-ம் ஆண்டு 288 ஆசிரியர்கள் ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களின் ஒப்பந்தம் ஆண்டுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இவர்கள் தங்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்கிடையே கடந்த 29ந் தேதி 175 ஆசிரியர்களுக்கு பணி ஆணை வழங்கும் விழாவில் கலந்துகொண்ட அமைச்சர் நமச்சிவாயம், கல்வி துறையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் 288 ஆசிரியர் பணியிடங்களை, நிரந்தமாக்குவது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம் என்று கூறினார். இதனால் அவர்கள் மகிழ்ச்சியடைந்தனர். இதற்கிடையே கடந்த 31-ந் தேதி அவர்களின் ஒப்பந்தம் முடிவடைந்தாக அறிவிக்கப்பட்டது. ஒப்பந்தம் புதுப்பிக்கப்படவில்லை. இதனால் ...